#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்... பரிதாபமாக பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்!!
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை - துர்கா தேவி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் துர்கா தேவிக்கு அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து துர்கா தேவி அடிக்கடி தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று தனது ஒன்றரை வயது குழந்தையுடன் காட்டுப்பகுதியில் கள்ளக்காதலனை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது அந்த பச்சிளம் குழந்தையை கிணற்றின் அருகில் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அந்த ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறது. இதனையடுத்து குழந்தை இரவில் தவறி கிணற்றில் விழுந்து விட்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார் துர்கா தேவி.
ஆனால் குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதை அறிந்த உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் விசாரணையில் உண்மை வெளியானதை அடுத்து துர்கா தேவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் அஜய் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.