#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்களை ஆறுதல் படுத்திய பெட்ரோல் விலை!! ஆனால் டீசல் விலை??
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.54ஆகவும், டீசலின் விலை நேற்றைய விலையில் இருந்து எவ்வித மற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.41 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரங்களாக ஒரே விலையில் இருந்த பெட்ரோல் டீசல் விலை மூன்றாவது நாளாக இன்று பெட்ரோல் விலை மட்டும் குறைந்துள்ளது.