#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாங்க சொல்ற இடத்துக்கு வந்தால் தனிமையில் இருக்கலாம்! ஆப் மூலம் வந்த செய்தி! இறுதியில் நடந்தது?
மதுரையில் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு துறையில் காவலராக பணிபுரிபவர் பழனிகுமார். இவருக்கு LOCANTO என்ற App மூலம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளவும் என்று ஆசை வார்த்தை கூறி மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
உடனே, அந்த கும்பலை பிடிக்க நினைத்த பழனிகுமார் வாடிக்கையாளர்போல் அந்த நம்பரில் பேசியுள்ளார். அவர்களும் அணைத்து விவரங்களையும் பழனிகுமாரிடம் தொலைபேசியில் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும், ஒரு மணி நேரம் என்றால் 4 ஆயிரமும், ஒரு இரவு என்றால் 12 ஆயிரம் எனவும் ரேட் பேசியுள்ளனர்.
மேலும், நீங்கள் வருவதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து சக போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, பாலியல் கும்பல் சொன்ன இடத்திற்கு பழனிகுமார் சென்றுள்ளார். அங்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்துள்ளன்னர்.
இந்நிலையில் மறைந்திருந்த போலீசாருக்கு பழனிகுமார் சிக்னல் கொடுக்க அவர்கள் அந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர்.