#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்களுக்கு இனிப்பான செய்தி! பொங்கல் பரிசாக தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர் குடும்பங்களுக்கும் இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
இந்நிலையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பரிசாக வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் இதனை குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .