#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன ஒரு கேலிக்கூத்து.! ஆதங்கத்துடன் தலையில் அடித்துக்கொண்ட பிரசன்னா.! ஆதரவளிக்கும் நெட்டிசன்கள்!! இதுதான் காரணமா?
சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகள் ஆவார். பி.டெக் படிப்பை முடித்த இவர் கனடா செல்வதற்காக தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்பொழுது பள்ளிக்கரணை பகுதியில் சாலையில் உள்ள மீடியன் பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சுபஸ்ரீ அந்த வழியாகத் வந்தபோது, பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்துள்ளது.
இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து லாரியை ஓட்டிவந்த மனோஜ் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல், அரசியல் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்காமல் அச்சக நிறுவனத்திற்கு சீல் வைத்ததற்கு பலரும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பிரபல நடிகர் பிரசன்னா இதற்கு மிகவும் ஆவேசமாக என்ன ஒரு கேலிக்கூத்து என தலையில் அடித்துக்கொள்வதுபோல தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
What a mockery 🤦♂️🤦♂️ https://t.co/aPLtGF5d8R
— Prasanna (@Prasanna_actor) September 13, 2019