#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'புரெவி' புயல்: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.! எந்த எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா.?
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது. தற்போது திரிகோணமலையில் இருந்து 530 கிமீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேபோல் இந்த மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.