வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
தென்காசியில் பிரபல புரோட்டா கடையில் ரெய்டு; 200 கிலோ கெட்டுப்போன இறைச்சியால் அதிர்ச்சி...!
குற்றாலத்தில், பார்டர் ரஹ்மத் என்ற பிரபல பரோட்டா கடையிலிருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டர் பகுதியில், பாடர் ரஹ்மத் என்ற புரோட்டா கடை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துவிட்டு அடுத்தபடியாக உணவு சாப்பிட பார்டர் ரஹ்மத் புரோட்டா கடைக்கு செல்வது வழக்கம். அந்தளவிற்கு பிரபலமானது பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை. சமூக வலைதளங்களிலும் இந்த கடை மிகவும் பிரபலம்.
இந்நிலையில் ரஹ்மத் பரோட்டா கடையில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் புகார் எண் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ரஹ்மத் புரோட்டா கடைக்கு சோதனைக்காக நேற்று சென்றனர்.
அப்போது அங்கிருந்த உணவக ஊழியர்கள் கடைக்கு சொந்தமான குடோன் மற்றும் விற்பனைக்கு தயாராகி இருந்த பிரியாணியையும் மூடி வைத்துவிட்டு கடையை பூட்டி சென்றனர். இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் குடோனுக்கு சீல் வைத்தனர்.
மாலையில் சீலை அகற்றி குடோனை சோதனையிட்டபோது, அங்கு 200 கிலோ அளவுக்கு கெட்டுப்போன இறைச்சி இருந்தது. உடனடியாக அவற்றை அழிக்க உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.