"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
டெல்லி கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அதிரடி கருத்து!
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியதால், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நிற்பேன் எனக் கூறியிருந்தேன். டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டங்களை மத்திய அரசு இரும்பு கரம்கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய ரஜினி சில கட்சிகள் மதத்தை வைத்து போராட்டங்களை தூண்டுகின்றன. டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். இது போன்ற போராட்டங்களை ஆரம்பத்திலேயே மத்திய, மாநில அரசுகள் கிள்ளி எறிய வேண்டும் அமைதியாக போராட்டம் நடத்தலாம். ஆனால் வன்முறைக்கு இடம் கொடுக்க கூடாது என ரஜினி கூறியுள்ளார்.