#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் ரஜினியின் ஆதரவு நிச்சயம் பாஜக விற்கு கிடைக்கும்.! என்ன காரணம் தெரியுமா? ஓப்பனாக பேசிய பாஜக தலைவர்.!
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறுகையில், "வரும் 14ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க தயாராக உள்ளது. பா.ஜ.க-வுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி நிர்ணயிக்கப்பட்ட வெற்றியாக அமையும். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். நரேந்திர மோடியின் ஆட்சி வேண்டும் என்றே பாஜகவில் இணைந்துவருகின்றனர் என தெரிவித்தார்.
தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வரின் ஆட்சி நடைபெறுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும். ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர், ஆன்மீகத்தை எடுத்து செல்பவர் நிச்சயம் அவரின் ஆதரவு பாஜக விற்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.