வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சற்று நேரத்தில் மறுவாக்குப்பதிவு.! இரண்டாவது முறை ஓட்டு போட தயாராகும் வாக்காளர்கள்.!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று வேளச்சேரி தொகுதியில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி 92ல் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் இன்று காலை 7 மணி முதல் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, மறுவாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நேற்று நடைபெற்றன.
இந்த வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், வாக்குப் பதிவு நடைபெறும் மையத்துக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு இடதுகை நடுவிரலில் மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.