மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதியில் உணவு சாப்பிட்டு மயக்கம், வாந்தியால் அவதிப்பட்ட 50 மாணவிகள்; சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியபட்டணம், ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.
வெளியூரில் இருந்து வரும் மாணவிகள் தங்கி படிக்க பிரத்தியேக விடுதி வசதியும் இருக்கிறது. இந்நிலையில், நேற்று உணவு சாப்பிட்ட 50 பேர் அடுத்தடுத்து வாந்தி-மயக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கிடாவெட்டில் ஆட்டு ரத்தத்துடன் வாழைப்பழம் சாப்பிட்ட பூசாரி பலி; உடலை வருத்தி தொடர் பணியால் சோகம்.!
உணவுப்பாதுகாப்புத்துறை சோதனை
இவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விடுதியின் சமையல் கூடம் அனுமதி இன்றி செயல்படுவதை உறுதி செய்தனர்.
மேலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து, அதனை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. உணவு மாதிரிகளும் அதிகாரிகளால் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை; தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!