#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இயந்திரத்தில் சேலை சிக்கியதால் பரிதாபம்: 38 வயது பெண் தொழிலாளி பரிதாப மரணம்.. சேலத்தில் சோகம்.!
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கவனமாக பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம், கருக்கல்வாடி, கங்கானியூர் பகுதியில் வசித்து வருபவர் கோபி. மனைவி பூங்கொடி (வயது 38). இப்பகுதியில் கயிறு திரிக்கும் மில் வைத்து நடத்தி வருபவர் உத்திரவேலு.
இந்நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பூங்கொடி பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி பூங்கொடி வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோது, அவரின் சேலை கயிறு திரிக்கும் இயந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட பணியாளர்கள், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பூங்கொடியின் மகன் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.