#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மழை நீரில் காணாமல் போன பள்ளம்; கைக்குழந்தைகளுடன் கால் இடறி விழுந்த 3 பெண்கள்.!
தமிழ்நாட்டில் உள்ள பரவலான இடங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் பெய்யும் திடீர் கனமழை காரணமாக, தாழ்வான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
இதனிடையே, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தம் அருகே சாலைப்பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே சிறிய அளவிலான பள்ளங்களும் இருக்கின்றன.
தேங்கியிருந்த மழைநீரால் பள்ளம் தெரியவில்லை
இந்நிலையில், நேற்று விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடந்து வந்த 3 பெண்கள், சாலையோரம் தேங்கியிருந்த மழைநீரில் பள்ளம் தெரியாமல் தவறி விழுந்தனர். இவர்கள் கைக்குழந்தையுடன் வந்த நிலையில், மூவரும் அடுத்தடுத்து பள்ளத்தில் கால்களை வைத்து தவறி விழுந்தனர்.
இதையும் படிங்க: #Breaking: 32 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தேநீர் கடையை நோக்கி அவர்கள் சாலையை கடந்தபடி மழையுடன் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. உடனடியாக அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ளவர்களால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
3 #women, carrying #infants, #fell into #rainwater-filled #trench dug up by State #Highways for building storm water drainage on #Madurai Road in #Sattur on Tuesday evening. People in vicinity #rescued them from three-foot-deep pit left without any #caution #signages. @THChennai pic.twitter.com/iKjQn9qOK9
— Sundar Subbiah (@SundarSubbiah) August 21, 2024
இதையும் படிங்க: 31 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் அடித்து நொறுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!