#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரசு பள்ளி வகுப்பறையில் பெண் ஆசிரியையுடன் அடிக்கடி சில்மிஷம்! வெளியான புகைப்படத்தால் அதிர்ந்துபோன பள்ளி நிர்வாகம்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லீனாபுஷ்பராணி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஜான்சத்தியபாபு என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வராத நாட்கள் மற்றும் மதிய நேரத்தில் ஆசிரியர் ஜான்சத்தியபாபு ஆசிரியை லீனாபுஷ்பராணியை பார்க்க வருவதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் லீனாவைச் சந்திக்கும் பொழுதெல்லாம் பள்ளி வகுப்பறையிலேயே இருவரும் தனிமையில் இருந்து வந்ததாகவும், அந்த நேரங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஜான் சத்தியபாபு தனது செல்போனில் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சமீபத்தில் அந்த புகைப்படங்களைத் தவறுதலாக வாட்ஸப்பில் உள்ள தேனி மாவட்ட ஆசிரியர் குரூப்பில் ஜான் சத்தியபாபு பகிர்ந்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் கல்வி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஜான் சத்தியபாபுவை தனியார் பள்ளி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், லீனா புஷ்பராணி அரசு பள்ளியில் ஆசிரியையாக இருப்பதால், அதற்கான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகு அவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.