மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் அமோகமாக நடந்து வரும் பாலியல் தொழில்... போலீசாரின் அதிரடி நடவடிக்கை...!!
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார் .
சென்னை அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியை காவல்துறையினர் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது, வாலிபர்கள் பலர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அந்த வீட்டிற்குள் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அங்கு திருவேற்காடு கனக துர்கா நகரை சேர்ந்த பாலியல் புரோக்கர் சங்கீதா (28) இரண்டு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.
சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.