வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
புழல் சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்திய இளம்பெண் கைது.!
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த செல்வா என்பவர் கடந்த ஜூலை மாதம் கஞ்சா வழக்கில் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அவருடைய தங்கை மீனாட்சி நேற்று முன்தினம் புழல் சிறைக்கு வந்தார். அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் மீனா லட்சுமி கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் ஜீன்ஸ் பேண்டில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து புழல் போலீசில் புகார் செய்தனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் கைதியாக உள்ள அண்ணனுக்கு கஞ்சா கடத்தி வந்த மீனா லட்சுமி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.