வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சோறு வேணும்.. தூக்கமும் வேணும்.. வைரலாகும் குட்டி குழந்தையின் க்யூட் வீடியோ.!
ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தாலே அங்கு மகிழ்ச்சிக்கு குறையே இருக்காது. குழந்தைகள் செய்யும் செயலாக இருந்தாலும் சேட்டையாக இருந்தாலும் அவற்றை அனைவரும் ரசித்து பார்ப்பர்.
அந்த வகையில் தற்போது ஒரு குட்டி குழந்தையின் க்யூட் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தூக்கத்துடன் இருக்கும் குழந்தை கையில் உணவு தட்டை வைத்து கொண்டு படும் அவஸ்தை பார்ப்போரை ரசிக்க வைத்துள்ளது.
குழந்தை கையில் இருக்கும் சாப்பாட்டையும் விட முடியாமல், தூக்கத்தையும் விட முடியாமல் படும் அவஸ்தை பார்ப்போரை சிரிக்கவும், மீண்டும் மீண்டும் பார்க்கவும் தூண்டுகிறது.
இப்படி சொருகுதே தட்ட வச்சிட்டு போய் தூங்கு டா 😂😂😍😍😘 pic.twitter.com/frjpMrqXDY
— சரவணன் Ucfc (@saravananucfc) February 26, 2021