#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடர்ந்து எழுந்த கோரிக்கைகள்.! சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி அகற்றம்.!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி, சோழிங்கநல்லூர் செம்மொழி சாலை, கலைஞர் கருணாநிதி சாலை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் சுங்கச்சாவடி மையங்கள் செயல்பட்டு வந்தது. மேலும் அங்கு நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.பின் அந்த 4 சுங்கச்சாவடிகளிலும் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது.
ஆனாலும் அந்த நான்கு பகுதிகளிலும் சுங்கச்சாவடியில் பணம் வசூல் செய்யும் அறை மற்றும் கூடாரங்கள் அகற்றப்படாமல் பல மாதங்களாக அப்படியே இருந்துள்ளது. அது வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவற்றை அகற்ற கோரி தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது.
அந்த புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சுங்கச்சாவடியில் உள்ள அறைகள் கூடாரங்கள் போன்றவற்றை அகற்றும் பணிகள் தற்போது நடைபெறுகிறது. அதில் முதல்கட்டமாக சோழிங்கநல்லூர் செம்மொழி சாலை மற்றும் கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கூடாரங்கள், அறைகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளது.