#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆண்களே உஷார்.. இனி பெண்களிடம் உரசினால் உடனடி ஆப்பு.. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு.!!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு வசதிகள் கொண்ட பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பெண்களிடம் பேருந்தில் உரசி கொண்டும், சீண்டல்கள் செய்து கொண்டும் மற்றும் பெண்களிடம் தவறான பார்வையை செலுத்துவது போன்ற ஏதேனும் தவறான கண்ணோட்டத்தில் செயல்படும் ஆண்களை அடையாளப்படுத்தும் விதமாக மாநகர பேருந்தில் "எமர்ஜென்சி பட்டன்" வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உடனே எமர்ஜென்சி பட்டனை அழுத்தி தெரிவிக்கலாம். இதற்கு முன் "சலோ" என்ற செயலி மூலம் மக்கள் தாங்கள் செல்ல விரும்பும் பேருந்து, எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது, எப்பொழுது வந்து சேரும் என்ற தகவலை அறிந்து கொள்ளும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னையில் மட்டும் சுமார் "1200 பேருந்துகளில்" பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எமர்ஜென்சி பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களிடம் பாலியல் தொல்லை அல்லது உரசுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளப்படுத்த இந்த பட்டனை அழுத்தினால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து, இது பற்றி நாளை விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.