மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.! வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை.!
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்ட அரசாணையில், 2011 முதல் 2016-ம் வரையுள்ள ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி 2018-ம் ஆண்டு அக்டோபரில் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுவை வழங்கலாம் என்று அரசுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பகங்களில் 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் (1-1-2017 முதல் 31-12-2019 வரை) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிடுகிறது.
இந்த சலுகையை பெற விரும்புவோர், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். 3 மாதங்களுக்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1-1-2017 அன்றைய தேதிக்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.