#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாற்றியமைக்கப்பட்ட 10 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு நேரம்.! தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே பள்ளி கல்வித்துறை வெளியிட்டு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
பொதுவாக 10 ஆம் பொதுத்தேர்வுகள் அனைத்தும் சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிவடையும். இந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான நேரத்தை மாற்றியமைக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி மார்ச் மாதம் துவங்கவுள்ள 10-ம் வகுப்பு தேர்வில்,தமிழ் முதல்தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல்தாள், இரண்டாம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மட்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு நிறைவடையும் என நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப்பாட தேர்வுகள் போன்ற மற்ற அனைத்தும் எப்பொழுதும் போல காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12. 45 மணிக்கு என நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நேர மாற்றம் குறித்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.