#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொங்கல் பரிசு ரூ.1000 பெற இன்றே கடைசி நாள்; முந்துங்கள் மக்களே.!
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்வு இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசினால் ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு இலவசமாக பொங்கல் பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 வழங்கப்பட்டது. பரிசு தொகுப்புக்காக 258 கோடியும் பரிசு தொகைக்காக 1980 கோடியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி இந்த பொங்கல் பரிசு மற்றும் தொகையினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்றுடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை வழங்கும் நிகழ்வானது முடிவுக்கு வருகிறது. எனவே இதுவரை வாங்காத பொதுமக்கள் உடனடியாக பெற்றுக் கொள்ளவும்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ரேஷன் கார்டு வைத்திருக்கும் 95 % பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அரசு அனுமதித்துள்ளது'' என்றார்.