#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதற்காக போய் இப்படி செய்துவிட்டீர்களே, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட டாக்ஸி டிரைவர், கதறும் குடும்பத்தார்கள் .!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே இருக்கும் கக்கன் காலனியில் வசித்து வருபவர் அஜித்குமார்.42 வயதான இவர் டாக்சி டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி பிந்து. இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பெற்று புதிதாக ஆம்னி வேன் வாங்கி ஓட்டி வந்துள்ளார்.
ஆனால் போதிய வருமானம் கிடைக்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அஜித்குமார் மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது பற்றி வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜித்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.