கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது.! எந்த கட்சிக்கு தெரியுமா ஓட்டு.?
வரும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு முறை பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அனைவரும் தபால் வாக்குப்பதிவு முறையையே பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தென்காசியில் தபால் வாக்குப்பதிவை வாட்ஸ்அப், முகநூலில் பகிர்ந்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் ஆசிரியை ஒருவர் அமமுக-வுக்கு வாக்கு செலுத்தியதாக தபால் வாக்கு சீட்டு வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பான விசாரணையில், அந்த தபால் ஓட்டை பகிர்ந்தது வெள்ளக்கால் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை என்பது தெரியவந்தது.
தபால் வாக்கு பதிவுக்கு சென்ற அந்த ஆசிரியையின் கணவர் அ.மு.க வில் உள்ளார். இந்தநிலையில் அவர் அளித்த தபால் வாக்கை கணவனுக்கு போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் எனது மனைவி தபால் ஓட்டை தனது கட்சிக்கு போட்டதை நிரூபிக்க நண்பனுக்கு அனுப்பியுள்ளார். இதை முகநூலில் அவரது நண்பர் செந்தில்குமார் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. இந்தநிலையில் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.