கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
சுற்றுலா வந்த 2 பெண்களுக்கு நேர்ந்த சோகம்.. குற்றாலம் மெயின் அருவியில் இழுத்து செல்லப்பட்டு பலி..!
குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கில் சிக்கி 2 பெண் சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உட்பட பல பேரருவியும், சிற்றரருவியும் உள்ளன. இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் திரளாக வந்து நீராடி செல்வது வழக்கம்.
தற்போது குற்றால சீசன் தொடங்கியுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் எப்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வரும். குற்றாலப்பகுதிகளில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது கனமழை வெளுத்து வாங்கினால், அது கீழே தெரியாது.
சுமார் 2 முதல் 3 மணிநேரத்தில் திடீரென காற்றாற்று வெள்ளம் அருவிகளில் வரும். முந்தைய காலங்களில் அருவிகளில் தீடீர் மரணங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில், நேற்று சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் நீராடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென காற்று வெள்ளம் வந்துள்ளது.
இந்த வெள்ளத்தின் போது ஐந்து சுற்றுலா பயணிகள் நீருடன் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் மூன்று பேர் தீயணைப்புத் துறையினர் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சுற்றுலாவுக்காக வந்திருந்த சென்னையில் உள்ள பெரம்பூரைச் சார்ந்த மல்லிகா மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த கலாவதி ஆகியோர் வெள்ளத்தின் பிடியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் நிகழ்விடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், அருவியில் குளிக்க மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் நீராட தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். குற்றாலம் மெயின் அருவியில் பல வருடங்கள் கழித்து நீரினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அங்குள்ளோரை வருத்தமடைய செய்துள்ளது.