பள்ளி அருகே காருக்குள் பிணமாக டிரைவர்... மர்ம மரணம் குறித்து காவல்துறை விசாரணை.!



the-driver-who-was-found-dead-in-the-car-near-the-schoo

திருச்சி பாலக்கரையில் காருக்குள் டிரைவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரையில் உள்ள சவேரியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(33). இவர் வாழவந்தான் கோட்டையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது காருக்கு திருச்சி பாலக்கரையை
ச் சேர்ந்த எட்வர்ட் ஆரோக்கியராஜ் என்பவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார்.

tamilnaduநேற்று இரவு திருச்சி மேலபுதூர் பகுதியில் உள்ள பள்ளி அருகில் காருக்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் எட்வர்ட் ஆரோக்கியராஜ். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்துப் பார்த்ததில் அவர் இறந்தது தெரிய வந்தது.

tamilnaduஇதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் இறந்த எட்வர்ட் ஆரோக்கியராஜின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி 
வைத்தனர். மேலும் இந்த மர்ம மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.