மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தில் ரேச்சல்ரோக் ஷனா - சசிசாமுவேல் தம்பதியினர் தங்களின் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரேச்சல்ரோக் ஷனா கடைக்கு செல்வதற்காக தனது இருச்சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து ரேச்சல்ரோக் ஷனா லாடக்கரணை அருகே சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். அப்போது அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் ரேச்சல்ரோக் ஷனாவிற்கு உதவ யாருமில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த வழியாக சென்ற சிலர் ரேச்சல்ரோக் ஷனா பள்ளத்தில் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு ரேச்சல்ரோக் ஷனாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரேச்சல்ரோக் ஷனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உத்திரமேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரேச்சல்ரோக் ஷனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பள்ளத்தில் விழுந்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.