#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட்டப்பகலில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இளைஞர்.. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொள்ளையனை மடக்கி பிடித்த போலீசார்..!
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசுந்தரி என்ற மூதாட்டி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது மூதாட்டியை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். இதனால் பதறிப் போன மூதாட்டி அருகில் இருந்த காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மூதாட்டி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி அந்த மர்ம நபரை கைது செய்துள்ளனர்.