மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவலர்களை தாக்கிய பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கைது : அனுமதியின்றி பேனர் ஒட்டியதை கண்டித்ததால் வெறிச்செயல்.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று வெகு விமர்சையாக பாஜக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. சில இடங்களில் பிரதமரின் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன.
ஒருசில பகுதிகளில் பேனர் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்க அனுமதி இல்லாத சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கண்காணிப்பு பணிக்கு சென்ற காவல்துறையினர் பாஜக தொண்டர்களை கண்டித்த நிலையில், அவர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோவில்பட்டி பாஜக நகர தலைவர் சீனிவாசன் உட்பட இரண்டு பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்து முன்னணி கட்சியை சேர்ந்த இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.