#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
40 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது... விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி.!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 40 வயது பெண்மணி கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள குண்டியல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா(40). இவளது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஐந்தாம் தேதி இவர் வீட்டு அருகே சேலையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்தக் கொலையை சந்தேக மரணமாக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சபிதா விசாரணையை மேற்கொண்டு வந்தார்.
அப்போது அம்பிகாவின் செல்போனிற்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போது திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளியை சேர்ந்த ஏழுமலை (24) என்பவர் மீது சந்தேகம் வந்தது. அவரை கைது செய்து நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து அம்பிகாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அம்பிகாவிற்கும் ஏழு மலைக்கும் இடையே கள்ளக்காதல் இருந்திருக்கிறது. மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அம்பிகாவை தீர்த்து கட்ட முடிவு செய்த அவர் தனது நண்பர்களான நாட்றம்பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி (23) மற்றும் பந்தாரப்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருடன் திட்டமிட்டு அம்பிகாவை தனியாக அழைத்துச் சென்று அவருடன் மூன்று பேரும் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.