வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கள்ளஓட்டை சர்க்கார் பாணியில் முறியடித்து வாக்கை செலுத்திய வாக்காளர்.. நெல்லையில் ருசிகர சம்பவம்.!
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில், நடிகர் விஜயின் வாக்குகளை வேறொருவர் கள்ள ஓட்டாக செலுத்திவிட, அதனை விஜய் போராடி பெற்று மீண்டும் வாக்கை செலுத்துவது போன்ற காட்சிகள் இருக்கும். இந்நிலையில், திருநெல்வேலியில் அதனைப்போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை நகரம் 26 ஆவது வார்டில் உள்ள பள்ளியில், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இன்று பொதுமக்கள் காலை முதலாகவே தங்களின் வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.
26 ஆவது வார்டில் வசித்து வரும் நாகராஜன் என்பவர் தனது வாக்குகளை செலுத்த வர, தேர்தல் அலுவலர்கள் நீங்கள் ஏற்கனவே வாக்கு செலுத்திவிட்டீர்களே என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான நாகராஜன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய, அவரின் வாக்கை மற்றொருவர் கள்ள ஓட்டாக செலுத்தி சென்றது அம்பலமானது. இதனையடுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் குற்றாலநாதர் உதவியுடன் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என நாகராஜன் கோரிக்கை வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் ஆணைய 14 ஆம் எண் படிவத்தை பூர்த்தி செய்து தரக்கூறி, அவரின் வாக்குகளை செலுத்த அனுமதி செய்தனர். இதனைத்தொடர்ந்து, நகராஜுனும் தனது வாக்குகளை பதிவு செய்து சென்றார்.