மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை; சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!
மதுரை மாவட்டத்திலுள்ள சிந்துபட்டி வி.கல்லப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மனைவி வளர்மதி (வயது 40). தம்பதிகளுக்கு 17 வயது மகன் இருக்கிறார். இவர் சமையல் வேலை உதவியாளராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார்.
உடன் பணியாற்றுபவருடன் கள்ளத்தொடர்பு
முத்துராமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், வளர்மதி திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். வளர்மதியுடன் 35 வயதுடைய ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னாளில் கள்ளத்தொடர்பாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: செல்போனால் நேர்ந்த கொடூரம்.! தம்பினு கூட பார்க்காமல் அண்ணனின் வெறிசெயல்!!
இதனையடுத்து, இருவரும் பல நேரங்களில் தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். மேலும் வளர்மதி சொந்த ஊர் வந்து செல்லும்போது ராஜ்குமாரும் உடன் வந்து சென்றுள்ளார். இதனை அறிந்த வளர்மதியின் மகன், தனது தாயார் மற்றும் அவரது காதலரை கண்டித்து இருக்கிறார்.
கண்டிப்பை கேட்காததால் கொடூர கொலை
இந்நிலையில், நேற்று சிறுவன் தனது வீட்டில் ராஜ்குமார் இருப்பதை கண்டு தகராறு செய்துள்ளார். பின் சமாதானம் பேசுவது போல மலையடிவாரப் பகுதிக்கு இருவரும் சென்ற நிலையில், அங்கு வாய்த்தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிறுவன் ராஜகுமாரை மது பாட்டிலை உடைத்து குத்தி இருக்கிறார். நிலைதடுமாறி விழுந்த அவரின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் இந்த காவல்துறையினர், சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ராஜ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தினமும் குடித்துவிட்டு அடி, உதை.! பொறுக்க முடியாமல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!!