#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிட் அடித்து சிக்கியதால், மாணவன் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.! திருப்பூரில் பரிதாபம்.!
தேர்வில் பிட்டடித்து மாட்டிக்கொண்ட மாணவன், பெற்றோரை அழைத்து வர ஆசிரியர்கள் அறிவுறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், கணியூரில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவர், 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். பள்ளியில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், கலைச்செல்வன் தேரின் போது பிட் அடித்து மாட்டியுள்ளார்.
இதனை கண்டறிந்த ஆசிரியர் கலைச்செல்வனை கண்டித்து, பிட் அனைத்தையும் வாங்கி தேர்வு எழுத அனுமதி செய்துள்ளார். முதல் முறை ஆசிரியர் மனிதாபிமானத்துடன் மணித்துவிட்டதால், கலைச்செல்வன் மீண்டும் தேர்வில் பிட் அடித்துள்ளார். அப்போதும் ஆசிரியர் கலைச்செல்வனை கையும் களவுமாக பிடித்துள்ளார்.
ஏற்கனவே கலைச்செல்வனை கண்டித்து இருந்த ஆசிரியர், இரண்டாவது முறையாக சிக்கியதால் கலைச்செல்வனை தலைமை ஆசிரியரிடம் அனுப்பி இருக்கிறார். அவர் கலைச்செல்வனிடம் பெற்றோரை நாளை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன், பள்ளி வகுப்பறையின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
கலைச்செல்வனின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விஷயம் தொடர்பாக உடுமலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.