கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
போனில் நிர்வாணமாக இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் வீடியோ..! திருப்பூர் இளைஞனின் பரபரப்பு செயல்.!!
பெண் பெயரில் பேக் ஐ.டி ஓபன் செய்து, பெண்களின் புகைப்படத்தை பெற்று மாபிங் செய்து வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றவைத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளார். இதன்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்ணின் புகைப்படத்தை போலியாக பதிவிட்ட வாலிபர், கல்லூரி மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதன் வாயிலாக மாணவியின் புகைப்படத்தை பெற்ற வாலிபர், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை மாணவிக்கு அனுப்பி வைத்த வாலிபன், நிர்வாணமாக வீடியோ காலில் வந்தால் புகைப்படத்தை அழித்துவிடுகிறேன். இல்லாத பட்சத்தில் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்வேன் என பெண் குரலில் பேசி மிரட்டி இருக்கிறார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா உத்தரவின் பேரில், அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வந்தனர். சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர், மேட்டுக்காடு பகுதியை சார்ந்த நியாஸ் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த நிலையில், அவனது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனை ஆய்வு செய்ததில் பல இளம்பெண்களின் அரை நிர்வாண மற்றும் முழுநிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. அதன்பேரில், நியாஸிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலியான பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு கணக்கை தொடங்கும் நியாஸ், கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசி இருக்கிறார். பெண் குரலில் பேசுவதால் பெண்களும், எதிர்தரப்பு கணக்கை பெண் என நினைத்து இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் பேசி வந்துள்ளனர்.
பின்னர், உங்களின் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கூற, பெண்களும் அதனை நம்பி தங்களின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதனை ஆபாசமாக மாபிங் செய்து சித்தரித்து இளம்பெண்கள் மற்றும் மாணவிகளை மிரட்டும் நியாஸ், வீடியோ அழைப்பில் நிர்வாணமாக வர வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் ஆபாச படத்தினை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.
பயத்தில் இருந்த பல மாணவிகளும், இளம்பெண்களும் நியாஸ் முன்பு வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றியதும், அதனையும் விடியோவாக பதிவு செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனைப்போல, திருப்பூர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபடுக்கையில் விஷயம் புகார் மூலமாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
நியாஸால் பாதிக்கப்பட்டுள்ள பிற பெண்கள் யார்? எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நியாசின் மீது பெண்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்களின் தனிப்பட்ட விபரம் பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.