மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
# | BREAKING| தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் சாலை மற்றும் பாலங்களுக்கான பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மதியம் மூன்று மணி அளவில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இதனைப் பற்றி மருத்துவமனை நிர்வாகம் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் முதல்வர் தனது பொது மருத்துவ சோதனைகளுக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இத்தகைய சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.