வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
#Breaking: முதல்வர் மு.க ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஆசாமி கைது.!
அரசியல் பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக அவ்வப்போது அழைப்புகள் பெறப்படுவதும், காவல்துறையினர் தேடுதல் வேட்டைக்கு பின் அவை போலி என்பதை கண்டறிவதும் சமீபகாலமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் வீடு உட்பட 7 இடங்களில் தான் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிலமணிநேரத்தில் அவை வெடிக்கும் என்றும் மர்ம நபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன காவல் துறையினர் முழுவீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரையும் சோதனையில் களமிறங்கினர். சோதனையின் முடிவில் போலியான அழைப்பு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலத்தை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர்.