#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்று நடைபெறுகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பயிற்சி ஆட்டம்; வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசுத்தொகை...!
சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அருகே மாமல்லபுரத்தில் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர்லாந்து உட்பட 189 நாடுகளை உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த போட்டியை மிக சிறப்பாகவும் என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஈடுபாடு காட்டி வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நவீன வசதிகளுடன் உள்ள இரண்டு பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அரங்கில் 196 செஸ் போர்டுகளும், மற்றொரு அரங்கில் 512 செஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடியும் நிலையில் உள்ளது. இந்த போட்டிக்காக மாமல்லபுரம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டுகள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் போன்ற தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் துல்லியமாகவும், சரியாகவும் செயல்படுகிறதா, என்பதை அறிய பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் இன்று செஸ் பயிற்சி ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் 1,414 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒருநாள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.