#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்று முதல் இங்கு சுங்க கட்டணம் ரத்து.! முதல்வர் அதிரடி அறிவிப்பு! உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்!!
இன்று முதல் சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பால் தென் சென்னை மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது பல நலதிட்டங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், தென்சென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். அந்த திட்டம் இன்று முதல் அமலாகும் நிலையில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.