#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடியை கெடுத்த குடிப்பழக்கம்: டாஸ்மாக் கடை அருகே தூங்கிய வியாபாரி பரிதாப சாவு..!
டாஸ்மாக் கடை அருகே குடி போதையில் தூங்கிய ஐஸ் வியாபாரி உயிரிழந்த சம்பவம் பெருந்துறை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள வெள்ளிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஐஸ் வியாபாரி சின்னராசு (66). இவரது மனைவி சென்னியம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
சின்னராசுவுக்கு நீண்ட காலமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடையில் செலவு செய்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது மனைவி சென்னியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்ப்பட்டுள்ளது.
இத்னையடுத்து, சென்னியம்மாள் கடந்த 10 வருடங்களாக சின்னராசுவை பிரிந்து தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் சின்னராசு அவரது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சின்னராசு அளவுக்கு அதிகமாக குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதற்கிடையில், சம்பவத்தன்று சீனாபுரம் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையின் அருகே அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.
இதந் காரணமாக சந்தேகமடைந்த அந்த பகுதி சேர்ந்தவர்கள், இது குறித்து சின்னராசுவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த அவரது உறவினர்கள் விரைந்து சென்று, அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னராசு முன்னதாகவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து பெருந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து பெருந்துறை காவல்துறையினர், இந்த சம்பவம் குறிட்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.