மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் துயரம்.. கணவருடன் பைக்கில் சென்ற போது மனைவிக்கு நேர்ந்த விபரீதம்.. போலீஸ் விசாரணை..!
ஈரோடு மாவட்டம் எல்லமங்கலம் குசலம்பாறை பகுதியில் வசித்து வருபவர்கள் சின்னசாமி - புஷ்பா தம்பதியினர். இவர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் சங்ககிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த கார் ஒன்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிபயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.