#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விளையாடிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு மாணவனுக்கு துயர முடிவு... காவல்துறை விசாரணை.!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நான்காம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளப்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி ஜனனி. இந்த தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு மகளும் ஒன்பது வயதில் சாய் தர்சன் என்ற மகனும் இருந்தனர். சாய் தர்ஷன் அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் சாய் தர்ஷன் தனது நண்பர்களுடன் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது மின் கம்பம் அருகே இருந்த ஸ்டே கம்பியை பிடித்து விளையாடியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். உடனடியாக அவனை மீட்டாக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை வீட்டில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் நான்காம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.