இரவு நேரத்தில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு.. திருச்சி பேருந்து நிலையத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம்..!



Trichy bus stand night time travel women safety

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்க வண்ணம் உள்ளது. தினமும் ஒரு பாலியல் தொல்லை, கற்பழிப்பு போன்ற செய்திகளையும் பார்க்க நேரிடுகிறது. இதனால் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், மக்கள் கூடும் இடங்களிலும் அது நிலைக்கிறது.

தமிழகத்தின் பிரதான நகரங்களுள் ஒன்றாக இருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இரவு வேளைகளில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மது மற்றும் கஞ்சா போதையில் சுற்றித் திரியும் இந்த சமூக விரோதிகள், பெண்கள் கழிவறைக்கு அருகே அமர்ந்து கொண்டு இரவு நேரங்களில் பயணத்தை மேற்கொள்ளும் பெண்களிடம் அத்துமீறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பெண்கள் தங்களின் குடும்பத்தினருடன் வருகையில் தனியே கழிவறைக்கு வெளியே காத்திருக்கும் நேரத்தில் சமூக விரோதிகள்  முகம் சுளிக்கும் வகையில் நடக்கும் செயல்கள் அதிகரித்து இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னதாக திருச்சிக்கு சென்று இருந்த பெண்மணி ஒருவரின் முன்னிலையில் மது போதை ஆசாமி ஆபாச செயல்களில் ஈடுபடுபட்டுள்ளார். அவர் என்ற செய்வதென்று தெரியாமல் முகம் சுழிக்க, மற்றொரு பெண்மணி குறித்த நபரை எச்சரித்ததை தொடர்ந்து காமுகன் அங்கிருந்து சென்றுள்ளான்.

மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலேயே இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ள நிலையில், காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.