கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தாயின் கண்முன் கை-கால்களை கட்டி, வாயில் துணிவைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்; திருடனின் பதறவைக்கும் செயல்.. தமிழகமே அதிர்ச்சி.!
தாயின் கண்முன் மகள் பலாத்காரம் செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இதனால் அந்த பெண்மணி தனது 17 வயது மகளுடன் தனியே வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி அதிகாலை 03:30 மணியளவில் தாயும், மகளும் வீட்டிற்குள் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், இருவரின் கை-கால்களை கட்டிப்போட்டு வாயில் துணிவைத்து அவர்கள் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்துளான். மேலும், தாயின் கண்முன் 17 வயது சிறுமியை பலாத்காரமும் செய்துள்ளான். இருவரும் நடந்ததை வெளியே கூற இயலாமல் 2 நாட்கள் தவித்து வந்த நிலையில், பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், தஞ்சாவூரை சேர்ந்த கொள்ளையன் முகமது உசேன் என்பவன் குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவான முகமது உசேனை கைது செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அம்மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.