#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ளக்காதல் மோகம்.. பெண்ணை சந்திக்க ஸ்கெட்ச் போட்டு அதிகாரிகளை கடுப்பாக்கிய இளைஞன்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர் பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சந்தியா (வயது 24). இவர் திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தம்பதிகளுக்கு சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் ஆகும். இருவரும் திருமணத்திற்கு பின்னர் ஒப்பந்த அடிப்படையில் திருவானைக்காவல் சன்னதி தெருவில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர்.
கடந்த சில மதத்திற்கு முன்னதாக ஒப்பந்தக்காலம் முடிவடைந்ததால், தம்பதிகள் சொந்த ஊர் செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, திருச்சியில் இருந்து சொந்த ஊரான திருப்பத்தூர் ராவுத்தன்பட்டிக்கு ஒருவாரத்திற்கு முன்னதாக சென்றுள்ளனர். இந்த நிலையில், தம்பதி குடியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களின் வீட்டில் இருந்த சந்தியாவை, அவரது குடும்பத்தார்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் ஸ்ரீரங்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டிற்குள் இரத்தம் சிதறி கிடந்த நிலையில், இரத்தக்கறை படிந்த சட்டை இருந்துள்ளது. இதனால் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும், முத்துக்குமார் - சந்தியா தம்பதியின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது, வாலிபர் ஒருவர் சந்தியாவிற்கு வீட்டிற்கு வந்து செல்வது தெரியவரவே, அவர் யார்? என்ற விசாரணையில் பேக்கரியை ஒப்பந்தத்திற்கு வழங்கிய துரைபாலன் (வயது 26) என்பதும், அவர் தான் வீட்டின் உரிமையாளருக்கு சந்தியா குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலை தெரிவித்தவர் என்பதும் அம்பலமானது.
அவரை பிடித்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சந்தியாவிற்கும் - துரைபாலனிற்கும் இடையே கடந்த சில வருடமாக கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் அவ்வப்போது சந்தியாவின் வீட்டிலேயே தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கள்ளக்காதலனிடம் சொல்லாமல் சந்தியா கணவருடன் சொந்த ஊருக்கு சென்றதால், அவரை காண இயலாமல் துரைபாலன் தவித்துள்ளார்.
இதனால் கள்ளக்காதலியை வரவழைக்க கறிக்கடையில் இருந்து ஆட்டு இரத்தம் வாங்கி வந்து வீட்டினுள் தெளித்துவிட்டதும் தெரியவந்துள்ளது. இறுதியில், துரைபாலனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற தகவலும் தெரியவந்ததால், கள்ளக்காதல் மோகத்தால் அவர் செய்த சம்பவங்கள் அம்பலமானது. இதனால் அவரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாமா? அல்லது மனநல காப்பகத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கலாமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.