விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
நெஞ்சை உலுக்கும் சோகம்.. அலட்சியமாக கிரைண்டரை சரிசெய்ய முயன்ற பெண் மின்சாரம் தாக்கி பலி.!
கிரைண்டர் ரப்பர் வளையம் அறுந்த நிலையில், அதனை அலட்சியமாக சரி செய்ய முயற்சித்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி, மருங்காபுரி வளநாடு அருகேயுள்ள ஆத்துப்பட்டியில் வசித்து வருபவர் சங்கர். இவரின் மனைவி ராதிகா (வயது 24). தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 வயதுடைய குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில், வீட்டில் ராதிகா கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டு இருந்த நிலையில், கிரைண்டரில் ரப்பர் வளையம் இருந்துள்ளது. இதனை அவர் சரிசெய்ய முற்பட்டபோது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி இருக்கிறார். இதனைக்கண்ட கணவர் சங்கர் மனைவியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார்.
மருத்துவமனையில் ராதிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் தகவல் அறிந்து வந்த வளநாடு காவல் துறையினர் ரதிகளின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.