மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"புள்ளத்தாச்சிய இப்படி செஞ்சிட்டானே.." தாய், மகள் கொடூர கொலை.!! தந்தை வெறி செயல்.!!
கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் மகளை கொலை செய்த நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜவுளி ஏற்றுமதி நிறுவன தொழிலாளி
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும் 6 வயதில் சாரதிபாலா என்ற மகளும் இருந்தனர். இவர் கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் இவரது மனைவி கல்பனா 6 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
கர்ப்பிணி மனைவி மற்றும் மகள் கழுத்தறுத்து படுகொலை
இந்நிலையில் செல்வகணபதி இன்று காலை நேரத்தில் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 6 வயது மகளை கொடூரமாக கழுத்தறுத்து படுகொலை செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பூச்சி மருந்தை தின்றுவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: #Big News: ஆம்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அத்துமீறிய காமக்கொடூரன்; அடித்துக்கொன்ற தகப்பன்..!
தீவிர விசாரணையில் காவல்துறை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட கல்பனா மற்றும் அவரது மகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற செல்வ கணபதியை மீட்ட காவல்துறையினர், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கரூர் நகரில் மனைவி மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: நவீன துப்பாக்கி, ஸ்கோப்புடன் வலம்வந்த நபர்; அதிர்ந்துபோன திருப்பூர் மக்கள்.. உண்மை இதோ.!