"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மதுவால் வந்த வினை.. தற்கொலை செய்துகொண்ட தம்பி.! விரக்தியில் அண்ணன் எடுத்த முடிவு.! பரிதாபமாக போன 2 உயிர்.!
சென்னை கொரட்டூர் எல்லையம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(45). இவருடைய அண்ணன் சேட்டு(50). இவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். சுரேசுக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். சுரேஷின் அண்ணன் சேட்டு அவரது குடும்பத்தை பிரிந்து தம்பியின் வீட்டருகே வசித்துவந்துள்ளார்.
சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்தநிலையில் குடிபோதைக்கு அடிமையான சுரேஷ், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், சுரேஷ், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இ்ந்த தகவல் அருகில் வசிக்கும் அவரது அண்ணன் சேட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சேட்டு, தனக்கு ஆறுதலாக இருந்த தம்பி தற்கொலை செய்து கொண்டானே என்ற விரக்தியில் சேட்டுவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து தம்பி, அண்ணன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.