"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் இரண்டு பெண்கள் தற்கொலை முயற்சி.! பரபரப்பு சம்பவம்.!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெய மீனாம்பிகை ஆகிய இரண்டு பெண்கள் நேற்று சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டிற்கு அவரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு சென்று முதலவரை சந்திக்க அனுமதிக்குமாறு காவலர்களிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால் காவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த இரண்டு பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் அவர் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் மற்றொரு பெண்ணான ஜெய மீனாம்பிகை அவரின் கழுத்தை தானே இறுக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார், அந்த இரண்டு பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.