#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் எப்போதும் ஒரே மாதிரி தான்... சிம்பிளாக வந்து அமைச்சர் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்... குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழகத்தின் 35 ஆவது அமைச்சராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.
பொதுவாக அமைச்சராக பதவி ஏற்கிறார்கள் என்றால் மேகப் எல்லாம் போட்டு தலையில் டை அடித்து கிளின் ஷேவ் செய்து வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் உதயநிதி அதற்கு மாறாக மிகவும் சிம்பிளாக கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளையில் சட்டையில் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார்.
அவ்வாறு வந்த உதயநிதி ஸ்டாலின் முகத்தில் எந்தவிதமான பதற்றமும் இன்றி அனைவரிடமும் சிரித்து பேசி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று கொண்டார். பின்னர் அவர் தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்.