நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற நண்பர்கள்.. 23 வயது இளம் விவசாயிக்கு நேர்ந்த சோகம்.!



Vellore Anaikattu 2 Man Gang Rape Attempt

 

நண்பர்கள் வழியில் நிற்கிறார்கள் என வாகனத்தை நிறுத்தியவருக்கு இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் முத்துக்குமரன் மலைக்கிராமத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன் (வயது 23). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர்கள் அபிமன்யு (வயது 23), கோகுல் (வயது 21). 

இருவரும் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்கள். புத்தாண்டன்று சிலம்பரசன் தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து ஒடுக்கத்தூருக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள அண்ணா சிலை அருகில் வரும்போது குடிபோதையில் இருந்த கோகுல் மற்றும் அபிமன்யு சிலம்பரசனை இடைநிறுத்தியுள்ளனர். இருவரும் நண்பர்கள் என்பதால் சிலம்பரசனும் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது, அபிமன்யு மற்றும் கோகுல் சேர்ந்து சிலம்பரசனின் மனைவியை பலாத்காரம் செய்யும் எண்ணத்தோடு நெருங்கியுள்ளனர். சிலம்பரசன் தனது மனைவியை காப்பாற்றி இருக்கிறார். 

அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்ததால் இருவரும் தப்பி செல்லவே, சிலம்பரசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், தலைமறைவான இருவரையும் நேற்று கைது செய்தனர்.